left shape

நிதி நிம்மதி (Nidhi Nimmathi)

பெண்களுக்கான நிதித் திட்டமிடல் கையேடு
f
  • cover
  • author A book by
    Abubakr Siddique A.G
bottom shape

பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வின் பணிகளுக்கிடையில்,

  1. நிதிக் குறிக்கோள்களை எப்படித் திட்டமிடுவது?
  2. முதலீட்டு வகைமைகளிலிருந்து தேவையானதை எப்படித் தேர்வுசெய்வது?
  3. பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் ஆகியவற்றின் செலவை எப்படித் திட்டமிடுவது?
  4. ஆயுள், மருத்துவக்காப்பீடு முதலியவற்றை எப்படித் தேர்ந்தெடுப்பது?
  5. ஓய்வுக்கால வாழ்க்கைக்கான நிதியை எப்படித் திட்டமிடுவது?
  6. அனைத்து நிதி சார்ந்த ஆவணங்களையும் எப்படி ஒருங்கிணைத்துக்கொள்வது?

Book Reviews

See what our readers are saying.
"சரியான நிதித்திட்டமிடல் மூலம் பெண்கள் சுயசார்புடன், சீரான முன்னேற்றப் பாதையில் குடும்பத்தை வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கையை இந்த நூல் கொடுக்கிறது. இதை ஒரு நிதித் தன்னம்பிக்கை நூல் என்றே சொல்லலாம்."
Dr. ரேனா ரோஸலின்ட் M.D (Psychiatry), DPM இணைப்பேராசிரியர்,
மனநல மருத்துவர், வேலம்மாள் மருத்துவமனை, மதுரை
"தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகள், கவனத்தில் கொள்ள வேண்டிய நிதி ஆவணங்கள், அவற்றை முறைப்படுத்துதல், முதலியவற்றின் அடிப்படைகளைத் தெரியாத பெண்கள் கூட இந்நூலைப் படித்துத் தெளிவுபெறலாம். பெண்களுக்கான அவசியமான கையேடு இது."
ஜெ. ஆனந்தி, இணைப்பதிவாளர்
கூட்டுறவுத்துறை, சென்னை
"குடும்ப நிதியை நிர்வகிப்பதில் பெண்களின் அறியாமை மற்றும் இயலாமையை போக்கவும், அவர்களை ஆற்றல்ப்படுத்தவும் இந்நூல் பெரிதும் உதவும். ஒவ்வொரு பெண்ணும் கையில் வைத்திருக்கவேண்டிய முக்கியமான புத்தகம் இது"
Dr. M.ஹெலன் மேரி ஜாக்குலின், பேராசிரியர், பொருளியல் துறை,
லேடி டோக் கல்லூரி, மதுரை.
"பெண்கள் தங்களது குடும்பத்தின் நிதிமேலாண்மைப் பொறுப்பைக் கையிலெடுக்கவேண்டிய நேரம் இது. முதலீடுகள், காப்பீடுகள், பங்குசந்தை, ஒய்வூதியம் போன்ற முக்கியமான விஷயங்களில் பெண்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான அச்சங்களையும் சந்தேகங்களையும் களையும் இப்புத்தகம் ஒரு பெரிய கண்திறப்பாக உள்ளது."
Dr. சங்கரேஸ்வரி DGO, MD (Pharmacology), இணை பேராசிரியர் மருந்தியல் துறை
அரசு மருத்துவக் கல்லூரி, தேனி
"பெண்களுக்கு இந்தக்காலம் அளிக்கும் சவால்கள் ஏராளம். அவற்றில் அதிமுக்கியமானது அவர்கள் தங்களது நிதியைத் திட்டமிடுவதாகும். சம்பாதிக்கும் பணத்தை நிர்வகிப்பது, எதிர்காலக் குறிக்கோள்களைத் திட்டமிடுவது, இருக்கக்கூடிய பல்வேறு முதலீட்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வுசெய்வது, ஆயுள் மற்றும் உடல்நலத்தைக் காப்பீடு செய்வது, ஓய்வுகால வாழ்வைத் திட்டமிடுவது முதலிய அத்தியாவசியமான விஷயங்களில் பெரும் வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது ‘நிதி நிம்மதி. பெண்களுக்கு மட்டுமல்லாமல் இந்நூலைப் படிக்கும் எவருக்கும் பயன்படும் வகையில் இது உள்ளது. நிதித்திட்டமிடல் துறையில் நீண்டகால அனுபவமும் நிபுணத்துவமும் கொண்ட அபூபக்கர் சித்திக் எல்லோரும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய ஒரு ஆலோசனைக் கையேட்டை எழுதியுள்ளார்."
சுனில் சுப்பிரமணியம்,
நிர்வாக இயக்குநர், சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்
image

A.G.அபூபக்கர் சித்திக், CFP

செபி பதிவுப்பெற்ற (SEBI Registered RiA) நிதி ஆலோசகர்களில் ஒருவரான அபூபக்கர் சித்திக், இருபது ஆண்டுகளுக்கும் மேல் நிதித்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். உளவியல் முதுகலைப்பட்டமும் நிதித் திட்டமிடலில் உலகம் தழுவிய அளவில் பிரசித்திபெற்ற CFP சான்றிதழும் பெற்றவர்.

தனிநபர் நிதித் திட்டமிடல், குடும்ப நிதித் திட்டமிடல், ஸ்டார்ட் அப் நிறுவனர்களுகான நிதித்திட்ட ஆலோசனை முதலிய சேவைகளை வழங்கி வருகிறார்.

தம்பதிகளிடையே நிதிசார்ந்த புரிதலை ஆழமாக்கவேண்டி ரொமான்ஸ் வித் 06006016060 (Romance With Finance) என்ற பெயரில் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறார்.

மணி ஃபார் கிட்ஸ் (Money For Kids) என்ற பெயரில் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு நிதிசார்ந்த அறிமுகத்தைக் கொடுக்கும் பயிற்சிவகுப்புகளை இவர் வழங்குகிறார்.